ஐபிஎல் அறிமுக விழாவில் ஆட வரும் தேவி தம்பதி

News

11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐபிஎல் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தினமும் வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த ஐபிஎல்லில் இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் 2018 அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நடனமாட இருக்கிறார்கள்.

ஹிருத்திக் ரோஷன், ரிஷி தவான் ஆகியோரும், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ப்ரினீதி சோப்ரா ஆகியோரும் கலந்துகொண்டு நடனம் ஆடுகிறார்கள். மேலும் இவர்களோடு தமன்னாவும் இணைந்து நடனமாட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது, பிரபுதேவாவும் நடனம் ஆட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.