டெவில் திரைவிமர்சனம்.

cinema news movie review

டெவில் பட விமர்சனம்.

இயக்குனர்: ஆதித்யா

நடிகர்கள்: விதார்த், பூர்ணா, திரிகுன்

இசை: மிஷ்கின்,

ஒளிப்பதிவு:கார்த்திக் முத்து குமார்.

ஆதித்யா இயக்கத்தில், விதார்த், பூர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள படம் டெவில்.  விதார்த் மற்றும்  பூர்ணா  இந்த இருவரும் திருமணம் தம்பதிகள் என்று ஒரு பந்தத்த திற்குள் நுழக்கிறக்கள்.இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னனை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்ப்படுகிறது இந்த உறவு பிரச்சனையால் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலை ஏன்? யார் செய்தது என்ற உளவியல் திரில்லரில் கதையாக பயணம் செய்கிறது டெவில் படம்.

படம் தொடங்கியது முதல் பாதில் பல்வேறு ட்விஸ்ட்களுடன் செல்கிறது. குறிப்பிட்ட கதை மாந்தர்களை மட்டுமே வைத்து கதை நகர்ந்தாலும் கதாபாத்திர உருவாக்கம் சிறப்பாக இருப்பதால் நம்மால் ரசிக்க முடிகிறது.  பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட  காட்சிகள் சிறப்பு.அதே போல் இன்டீரியர் காட்சிகளும் சிறப்பான காட்சிகள்அமைந்துள்ளது, திரில்லர் வகையில் பயணம் செய்யும் இப்படம் ஒரு கட்டத்தில் ஹாரர் வகைக்கு மாறி ரசிகர்களை பயமுறுத்துகிறது.கார்த்திக் முத்து குமாரின் ஒளிப்பதிவும், S. இளையராஜாவின் படதொகுப்பும் இந்த பயமுறுத்தலுக்கு உத்ரவாதம் தருகிறது. மியூசிக் டைரக்டராக அவதாரம் எடுத்துள்ள இயக்குநர் மிஷ்கின் சிறப்பு தோற்றத்தில்  வருவது திகில்,தான் மான சீக குருநாதர் இளையராஜாவை போலவே இசை அமைத்துள்ளார். சில இடங்களில் எந்த பின்னணி இசையையும் தராமல் உணர்வுகளை கடத்துகிறார். பல இடங்களில் தனது குருவை போலவே வயலின் இசையை மிகப் பிரமாதமாக பயன்படுத்தி உள்ளார்.விதார்த்தும், பூர்ணாவும் ஒரு நிஜ தம்பதி போல் சிறப்பாக நடித்துள்ளனர்.நாயகன் விதார்த் ஒரு யதார்த்த வக்கீலாக நடித்திருக்கிறார், பூர்ணா தன். கணவன் மீது அன்பு, துரோகத்தின் போது கொந்தளிப்பு என இன்னும் பல உணர்வுகளை மிக சாதாரணமாக தரும் நடிப்பு ராட்சசியாக வாழ்ந்துள்ளார் பூர்ணா. படத்தில் பாராட்ட பல அம்சங்கள் இருந்தும் முடிவு தெளிவாக இல்லாதது ஒரு குறையே