நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலக சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்திவிராஜ் பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறிவரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் பிரத்தியோக பேட்டி அளித்தார் பிரித்விராஜ்.
இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், விஜயராகவன், கலாபவன் ஷாஜன், திலீப் போத்தன், அஜு வர்கீஸ், சுதேவ் நாயர், சாய்குமார், அர்ஜுன் அசோகன், சீமா மற்றும் பலர்.