அனைத்து மொழி திரைத்துறையிலும் பிஸியாக இயங்கி வரும் கணேஷ் வெங்கட்ராம் தமிழில் “உன் பார்வையில் மற்றும் ரெட் சாண்டல்வுட்” படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். அடுத்ததாக முன்னணி ஓடிடி தளம் தயாரிக்கும் புதிய பொலிடிகல் திரில்லர் தொடரில் நடிக்கவுள்ளார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் எப்போதும் சமூகநல நோக்குடன் செயல் பட்டு வருகிறார். பொதுபிரச்சனைகளிலும் தனது கருத்தை அழுத்தமாக தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மண்ணை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மண்னைப் பாதுகாப்போம் குழுவிற்கு தன் முழு ஆதரவை வழங்கியுள்ளார்.
தன் பிறந்த நாள் சிறப்பாக கோவளம் கடற்கறையை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிகழ்வில் பெருமளவில் கல்லூரி மாணவர்கள் & தன்னார்வலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். “நாம் நம்மை தனிமைப்படுத்தப்பட்டவர்களாக பார்ப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது, மற்றும் பிரச்சனை மற்றும் தீர்வின் ஒரு பகுதியாக நாம் இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார். “நீங்கள் வாழும் சூழலுக்கு ஒரு நல்லதை செய்த நீங்கள் பிறந்த நாளை விட சிறந்த நாள் எதுவுமில்லை” எனவும் – அவர் உற்சாகமாக கூறுகிறார்.