full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சமுத்திரகனியின் மலையாளப் படத்தில் தன்ஷிகா

dhan

`கபாலி’ படத்தில் ரஜினி மகளாக தன்ஷிகா நடித்த பிறகு, அவருக்கு, பல்வேறு படங்களில் விதம் விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி’ படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். தற்போது மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார்.

தன்ஷிகா நடிக்கும் முதல் மலையாள படம் இது. இதில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். இது தவிர தன்ஷிகா நடிக்க சமுத்திரகனி இயக்கும் `கிட்ணா’ படம் மலையாளத்திலும் வர இருக்கிறது. கன்னடத்தில் `உத்கர்ஷா’ படத்தில் நடிக்கிறார்.