தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிந்துள்ளனர். தனுஷ் கதை எழுதியுள்ள இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ஷான் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், இப்படம் குறித்து தனுஷ் கூறும்போது, ‘முதல் பாகத்தைப் போல இப்படமும் தாய் பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இரண்டாம் பாகத்துடன் மட்டும் முடிவடையாமல் 3, 4 ஆம் பாகம் என தொடரும். ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்னுடைய பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகிறது. இது எனக்கும் எனது ரசிகர்களுக்கும் சிறந்த நாளாக இருக்கும்’ என்றார்.
அதுபோல் ‘பவர் பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் இயக்க இருக்கிறேன் என்றும் தனுஷ் கூறியிருக்கிறார்.