full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

‘டிக் டாக்’கில் பிரபலமடைந்த மலையாள பாடல்… படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் தனுஷ்..!

 

தமிழில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து டாப் ஸ்டாராக இருக்கும் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தை முடித்திருக்கிறார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தற்போதைய லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால் தனுஷ், பிருத்வி ராஜ் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘ஐயப்பனும் கோஷியும்’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் உரிமையை ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களை தயாரித்த அதே நிறுவனமாக 5 ஸ்டார் பிலிம்ஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் ‘கலகாத்தா சாந்தனமீரம்’ என்ற பாடல் டிக் டாக்கில் மிக பிரபலம்.

இந்தப் படத்தின் கதை ஒரு போலிஸ்காரருக்கும், அந்த ஊருக்கும் புதிதாக லட்சியத்தோடு வரும் ஒரு இளைஞருக்கும் இடையே நடக்கும் கதை. இந்தப் படத்திலும் தனுஷ் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.