full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது

 

“ஒரு புகைப்படம் 1000 விஷயங்களை சொல்கிறது” என்ற ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. அது எப்போதுமே சினிமாவில் மிகச்சிறந்த நிரூபிக்கப்பட்ட கோட்பாடாக இருந்து வருகிறது. படத்தின் முதல் தோற்றம் படம் எதை பற்றியது, எப்படிப்பட்டது என பார்வையாளர்களை தயார்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் அளவில், உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் “பட்டாஸ்” எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34’ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஆடம்பரமான விருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று நான் கூறுவது, அவரை எப்போதும் கொண்டாடும் தீவிரமான ரசிகர்களை மட்டுமல்ல, சர்வதேச தளங்களுக்கும் அவரது ரசிகர் பட்டாளம் நீண்டுள்ளது. உலகளாவிய அளவில் அவர் தனது தனித்துவமான சோதனைகள் மூலம் ஒரு சுயமாக தனக்கென ஒரு தளத்தை நிறுவியுள்ளார். படத்தின் முதல் தோற்றம் மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டும் ஒன்றிணைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது தனுஷின் வேடிக்கையான தோற்றத்தையும், ‘பட்டாஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ப வண்ணங்களின் சுறுசுறுப்பான ஃப்ளாஷ்களையும் பார்க்கும்போது, இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக மாறும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல, அவர் தன் உடலை கச்சிதமாக வைத்திருக்கும் ஒரு நடிகர், அதனால் தான் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும், இயக்குனர் துரை செந்தில்குமார் அவரை மிக அழகாக காண்பிப்பதில் தனது சிறந்த அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இந்த கூறுகள் ஒன்றிணைந்து பட்டாஸை ஃபர்ஸ்ட் லுக்கை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் எப்போதும் குடும்ப பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். பட்டாஸ் அந்த கொள்கைக்கு நியாயம் செய்யும் படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

 

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அடுத்தடுத்து நிறைய அறிவிப்புகள் குறுகிய இடைவெளியில் வெளிவர இருக்கின்றன. ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் – தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இப்படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.