full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என தனது ஆதிக்கத்தை படரவிடும் ஒரு தமிழ் நடிகராக இருக்கிறார். இந்தியில் அவர் அறிமுகமான “ராஞ்சனா” படம் அவரை வடக்கே அறிந்த முகமாக்கியது. அதே போல அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “ஷமிதாப்” படமும் அவருக்கான அடையாளத்தை அங்கே உருவாக்கித் தந்தது. மேலும், தனுஷ் நடிப்பில் “The Extraordinary Journey of the Fakir” என்கிற படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அது “ராஞ்சனா” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. தனுஷ், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் மற்றும் அபய் தியோல் ஆகியோர் நடித்திருந்த அந்த படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கி இருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல் பாகத்தில் “உயிர்த்து எழுவேன்” எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் பாத்திரம், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும்.. காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டிருக்கிறதாம்.