full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படமும்

தனுஷ் இயக்கத்தில் `ப பாண்டி’ (பவர்பாண்டி) படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் – ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011-ல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `மயக்கம் என்ன’. இப்படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `இது நம்ம ஆளு’ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், `மயக்கம் என்ன’ படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.