*இந்த நிலையில் படத்தின் ஒருவரிக் கதையும் இப்போது வெளியாகியுள்ளது படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் திலீப்தாகீர் கதையை கசிய விட்டுள்ளார் அவர் கூறும்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மும்பையை சுத்தப்படுத்தும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் அவருக்கு நான் உதவியாக வருகிறேன் என்றார் இதன் மூலம் மும்பை தாதாக்களையும் ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது படத்தின் கதையை வெளிப்படுத்திய திலீப் தாகீர் மீது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உல்லிட்டட்ட படக்குழுவினர் கோபத்தில் உள்ளனர் இந்த படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிப்பதாகவும் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது*