full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கலையரசன் தங்கையின் உயர் படிப்பு கனவு

கலையரசன் – சாதனா டைட்டஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எய்தவன்’. சக்தி ராஜன் இயக்கியுள்ள இப்படத்தை பிரண்ட்ஸ் பெஸ்ட்டிவெல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில், தற்போதைய முக்கிய பிரச்சனையான மருத்துவத்தை படிக்க சென்று, அதனால் பாதிக்கப்படும் 16 பேரை மையமாக வைத்து கதை நகர்கிறது. அந்த சம்பவத்தால் பாதிக்கப்படும் அனைவரும், அதிலிருந்து தப்பவே முயற்சி செய்கிறார்கள்.

அதில் ஒருவர் நாயகனின் தங்கை. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும், அதனால் உருவாகும் பிரச்சினைகளும், சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அதை எதிர்கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதை.

காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து கமர்சியல் படமாக உருவாகியுள்ள ‘எய்தவன்’ வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.