தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்குவேன் – கமல்!

News
0
(0)

“ஜனவரி 26-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என நடிகர் கமலஹாசன் அறிவித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

நேரடி அரசியலில் முழுவீச்சில் செயல்பட தயாராகியுள்ள கமல், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியுள்ளார்.

விழாவில் கமல் பேசியதாவது,

“கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல சகோதரர்கள் கிடைப்பார்கள்.
என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்” என்றார்.

டிஜிட்டல் இந்தியா மாதிரி இல்லாமல், கமல் சொல்லும் “டிஜிட்டல் தமிழகம்” இருக்குமெனில் வரவேற்கலாம் தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.