full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சந்தித்தார். தம்பிதுரையைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார்.

சசிகலாவை சந்தித்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. 122 எம்எல்ஏக்களும் எங்களுடனே உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம், யாரிடமும் சமாதானம் பேசத் தேவையில்லை.” என்று கூறினார்.

இன்று எம்.எல்.ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், கென்னடி, பாலசுப்பிரமணியம் ஆகிய எம்.எல்.ஏக்களும் சந்தித்து பேசினர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் முதல் அமைச்சர் பழனிச்சாமியுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.