உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.
வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்களை ஒரு சிறிய வீடு கூட ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத்தைக் கொண்ட கார் வாங்க முடியாது ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குனர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இந்த அடையாள உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எங்களுடைய கஷ்டத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. நான் இதற்கு உறுதுணையாக இருப்பேன்.
இந்த உண்ணாவிரதத்தில் இயக்குநர் பாக்யராஜ், முன்னாள் ஃபெஃப்சி தலைவர் நடராஜ் மற்றும் ராதாரவி, K.S.ரவிகுமார், (Cine Music Union) தலைவர் தீணா, K.ராஜன், நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இயக்குநர் R.V.உதயகுமார் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
முன்னிலை : சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் தளபதி,
உடன் : செயலாளர் C.ரங்கநாதன், பொருளாளர் M.K.அருந்தவராஜா, துணை தலைவர்கள் B.நித்தியானந்தம் & அறந்தாங்கி சங்கர், இணை செயலாளர்கள் T.R.விஜயன் & S.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்