இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும்

News
0
(0)

 

 

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைகளமாக அமைகிறது. இப்படத்தில் ஒரு வாய் பேசமுடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இப்படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திகிலுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

 

மாதவன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் இணைந்து, அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ’ஹேரோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷானில் தியோ ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பை கவனிக்க, அலெக்ஸ் டெர்சிஃப் சண்டை காட்சிகளை அமைக்க, சாட் ராப்டர் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு மணி சியான் வசனம் எழுத, காட்சிகளுக்கு ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைக்க, பின்னணி இசைக்கு கிரீஷ் கோவிந்தன் பொறுப்பேற்று இருக்கிறார்.

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வ பிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில், மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், 5 மொழிகளில் உருவாகியிருக்கும் திகில் படமான ‘சைலன்ஸ்’, உலகமெங்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்

மாதவன் அனுஷ்கா ஷெட்டி அஞ்சலி ஷாலினி பாண்டே மைக்கேல் மேட்சன் சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா ஹன்டர் ஓ’ஹேரோ உள்ளிட்ட பலர்

தயாரிப்பு: பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத், கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட்
இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா ஒளிப்பதிவு: ஷானில் தியோ படத்தொகுப்பு: பிரவீன் புடி இசை: கோபி சுந்தர் பின்னணி இசை: கிரீஷ் கோவிந்தன்
பாடல்கள்: கருணாகரன் கலை: சாட் ராப்டர் சண்டை பயிற்சி: அலெக்ஸ் டெர்சிஃப்
ஸ்டைலிஸ்ட்: நீரஜா கோனா திரைக்கதை, வசனம்: மணி சியான் கதை, இயக்கம்: ஹேமந்த் மதுக்கர் மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.