full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை” ‘அசுரன்’ படத்திற்கு ரஞ்சித் புகழாரம்

பூமணி எனும் நாவலாசிரியரால் எழுதப்பட்ட வெக்கை என்ற நாவல் அசுரன் என்ற பெயரில் இயக்குனர் வெற்றிமாறமால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது .

ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை குறித்துப் பேசும் இப்படத்தில் நடிகர் தனுஷ் தந்தை , மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஞ்சித் தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்திக் காட்டிய வெற்றிமாறனுக்கும் , படத்தில் அசுரத்தனம் காட்டியிருக்கும் நடிகர் தனுசுக்கும் , தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.