full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தாராவியில் கால்பதிக்கும் பவித்ரன்

வசந்த கால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல், ஐ லவ் இந்தியா ஆகிய வெற்றிப்படங்களை ரமேஷ் அரவிந்த், சரத்குமார், விஜயகாந்த், அஜித் குமார், பிரசாந்த் ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் பவித்ரன்.

விஜய் நடிக்க மாண்புமிகு மாணவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்தவரும் இவரே. சிறிது இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘தாராவி’.

மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதையுடன் தயாராகியுள்ள இப்படத்தில் சதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகியோருடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம் லதா நடிக்க, நயன்தாராவின் அறம் படத்தில் நடித்து வரும் சுனுலட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

வி டி விஜயன் படத்தொகுப்பையும், மும்பை மாஸ்டரான அப்பாஸ் சண்டைப் பயிற்சியையும் பாரதி அகர்வால் நடனப் பயிற்சியையும் கவனிக்கின்றனர். பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துள்ள பவித்ரனின் மகனான அபய் பவித்ரன் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். புளியந்தோப்பு பழனி, பவித்ரன் பாடல்களை எழுதியுள்ளனர்.

மும்பையில் தாராவி, தமிழ்நாட்டில் சாலக்குடி ஆகிய அழகிய இடங்களில் மணிகண்டன் ஒளிப்பதிவில் தாராவி வளர்ந்துள்ளது.

மும்பை நல்லரசன், பாலசுப்ரமணியன் இருவரும் ஏ ஆர் எஸ் இண்டர்நேஷனுக்காக தயாரிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி பவித்ரன் இயக்கியிருக்கிறார்.