இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை காலமானார்

Actors cinema news

இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை காலமானார்

 

பிரபல இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை திரு எஸ். பாண்டியன் இன்று (நவம்பர் 16) காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் இயற்கை எய்தினார்.

 

84 வயதான திரு பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

 

அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் 1/14 ஏ, பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும். சேரன் தந்தை காலமானதை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

G-map:

 

https://maps.app.goo.gl/LdFdGMYcLMZbE1qe6