பரியனை வாழ்த்திய பிரம்மாண்ட இயக்குனர்..!!

News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் ‘பரியேறும் பெருமாள்’. கிராம வாழ்க்கையை, ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்ற இப்படத்தினை பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பெரும் நட்சத்திரங்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் வாழ்த்துக்களை பெற்று பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பாராட்டப்படும் ஷங்கர் இப்படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.