முதல் படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கு பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் நன்றி தெரிவித்துள்ளார்

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. ஜே.ஜே.பெட்ரிக் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தை தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “எனது ‘பொன்மகள்’ ஆனதற்கும், இந்த படத்தின் மீதும், என்மீதும் நம்பிக்கை வைத்ததற்கு உங்களுக்கு நன்றி சொன்னால் பத்தாது.

இந்த ஸ்கிரிப்டில் உறுதியாக இருந்தது முதல், அதை சூர்யா சாரிடம் எடுத்துச் சென்றது வரை, நீங்கள் என்னை ஊக்குவிக்கவில்லை என்றால் அது நடந்திருக்காது. உங்கள் அலாதியான அன்பும், நம்பிக்கையும் தான் படத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி மேம். எனது முதல் படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றிய உங்களுக்கும் சூர்யா சாருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.