full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் !

நடிகர் வைபவ் தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை நாயகனாக மாறியிருக்கிறார். மிக வித்தியாசமான, எளிமையான கதைகள். சாதாரண ரசிகன் தன்னை தொடர்புபடுத்திகொள்ளும் எதிர் வீட்டு பையனின் நடிப்பு என, அவர் படங்கள் வரிசையாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த வாரம் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் இயக்கத்தில் வைபவ், நந்திதா நடிப்பில் வெளியாகவுள்ள “டாணா” திரைப்படம் டிரெயலர் மூலம் ரசிகரகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிவசப்படும் தருணங்களில் திடீரென பெண்குரல் வந்துவிடும் வைபவ் கதாப்பாத்திரம் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.

படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் குறித்து இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டது…
பெண் குரலில் பேசும் வைபவின் கதாப்பாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். ஆனால் படப்பிடிப்பில் இதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தை மிகப்பெரிது. அவர் தனது சொந்த குரலில் பேசி பின் பெண் குரலில் டப்பிங் செய்யப்பட்டதாக அனைவரும் நினைக்கலாம்.  ஆம் அப்படிதான் செய்தோம். ஆனால் படப்பிடிப்பில் அவர் முழுக்க தன் குரலில் பேசவில்லை, கதாபாத்திரதன்மைக்காக தன் குரலை முழுக்க மாற்றி, கிட்டதட்ட பெண் குரல் மாதிரியே அவர் பேசினார். இது  அவருக்கு மிகுந்த சவாலாக இருந்தது ஆனாலும் ரசிகர்கள் பார்க்கும் போது அது சரியாக இருக்கவேண்டுமென அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்பொது பெருமளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எங்கள் மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. படத்தினை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் கலாட்டாவாக இருக்கும்.

இப்படம் வெறும் நகைச்சுவையில் மட்டுமே பயணிக்கும் படமாக இருக்காது. பயமுறுத்தும் ஹாரர், காமெடி, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என பல தளங்களில் இப்படம் பயணிக்கும். தயாரிப்பாளர் M C கலைமாமணி மற்றும் M N லக்‌ஷ்மி கலைமாமணி இருவருக்கும் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்காக இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் முழு திறமையையும் தந்துள்ளார்கள். நடிகை நந்திதா தனது கதாப்பாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். யோகிபாபு, வைபவுடன் திரையில் வரும் தருணங்கள் அனைத்திலும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிப்பார்கள். நடிகர் பாண்டியராஜன் எங்கள் அனைவரையும் விட மிகப்பெரும் திரை அனுபவம் கொண்டிருந்தாலும், மிக எளிமையாக பழகினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தின் மீது ஆர்வம் கொண்டு மிகப்பெரிய வெளியீடாக மாற்றித்தந்திருக்கும் Positive Print Studios  ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

Nobel Movies சார்பில் M.C.கலைமாமணி, M N லட்சுமி கலைமாமணி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி எழுதி, இயக்கியுள்ளார். வைபவ்,  நந்திதாவுடன் வி ஐ பி படப்புகழ் ஹரீஷ் பெராடி, பசங்க சிவக்குமார், உமா பத்மநாபன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்

இசை – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – சிவா GRN
படத்தொகுப்பு – பிரசன்னா G.K
கலை இயக்குநர் – பாசர் N.K.ராகுல்
சண்டைப்பயிற்சி – V. கோட்டி
நடனம் – சதீஸ்
பாடல்கள் – கு. கார்த்திக், தனிகொடி
நிர்வாக தயாரிப்பு – V. சுதந்திரமணி
இணை தயாரிப்பு – H. சனா உல்லா கான் , பிராசாந்த் ரவி, S.சந்தோஷ்

Positive Print Studios  சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் L.சிந்தன் ஆகியோர் வெளியிடும் இத்திரைப்படம் 2020 ஜனவரி 24 தமிழகமெங்கும் வெளியாகிறது.