20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக ஷவுரியா) ஆகியோரின் உறவால் உருவான கர்ப்பம் பற்றி அவர்களது பெற்றோர்கள் அறியத் தொடங்குவதாக ஆரம்பிக்கிறது தியா (கரு). ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், அவர்களுக்கு திருமணம் நடக்கிறது . துளசியின் கர்ப்பம் கலைக்கப்பட்டால் மருத்துவ படிப்பை தொடர முடியும், கிருஷ்ணனுக்கு வேலை கிடைக்குமென்றும் அறிகிறோம். ஆனால் மிக விரைவில், கருக்கலைப்பு செய்ய காரணமாக இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இறக்கின்றனர், அதை செய்த டாக்டர் கூட இறந்துவிடுகிறார். இந்த இறப்புகள் விபத்துகளாகவே தோன்றுகின்றன. ஆனால் துளசி ஏதோவொன்று கெட்டதாக உள்ளது என்பதை உணர்ந்துகொள்கிறார். கருவில் கலைக்கப்பட்ட குழந்தையே இறப்பிற்கு காரணம் என்று அவர் அறிகிறார். அந்த கற்பனைக் குழந்தையே தியா (பேபி வெரோனிகா). தியாவின் அடுத்த இலக்கு அவளது தந்தை!
தியா ஒரு ஒரு பிறக்காத குழந்தை பேயின் பழிவாங்கும் த்ரில்லர். இந்த ஸ்கிரிப்டில் சுமார் 100 நிமிடங்களுக்கு படத்தின் கதவு திறந்திருக்கிறது. சாய் பல்லவி தான் இழந்த குழந்தைக்கு ஏங்குவதாகவும் அவரது கணவனை காப்பாற்ற முயற்சிக்கிற மனைவியாகவும் நடிப்பில் அசத்துகிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு காட்சிக்கு ஒளிமயமாகவும், சாம் சி.எஸ் ன் பிண்ணனி இசை அச்சத்தையும் தருகிறது.
படத்தின் பல அசைவுகளை நம்மால் கணிக்க முடிகிறது. மேலும் குழந்தை தான் கொலையாளி என்பதை இயக்குனர் விஜய் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்திருக்கலாம். இரண்டாவது ரிலீல் சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதால் திரைக்கதையில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. இருப்பினும் யாரும் எதிர்பாராத வித்தியாசமான கிளைமாக்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.