திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக ‘கட்சிக்காரன்’ உருவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை.ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.


இப்படத்திற்கு ஒளிப்பதிவு- மதன்குமார்,எடிட்டிங் . யு கார்த்திகேயன்,இசை -ரோஷன் ஜோசப் பின்னணி இசை-C. M. மகேந்திரா ,பாடல்கள் நா. ராசா,பாடகர்கள் ஹரிச்சரண்,வேல்முருகன் என தொழில்நுட்பக் குழு உருவாக்கிப் படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.
‘கட்சிக்காரன் ‘ படப்பிடிப்பு உளுந்தூர்பேட்டை,துருகம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்துள்ளது. சரியாக திட்டமிடப்பட்டு
40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்கள்.விரைவில் ‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.