“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி

News
0
(0)

சமூகவலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள் “நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” நடிகர் ராஜ்கிரண் கூறினார்.

தமிழ் பட உலகில், மிக சிறந்த குணச்சித்ர நடிகராக இருப்பவர், ராஜ்கிரண். பிரபல கதாநாயகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகிறார். இவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது.

இதுபற்றி விசாரிக்க அவரை, ‘செல்போன்’ மூலம் தொடர்பு கொண்டபோது, அவரே பேசினார். அவர் கூறியதாவது:

“என்னைப் பற்றி அடிக்கடி இதுபோன்ற வதந்தி வந்து கொண்டிருக்கிறது. எனக்கு வேண்டாதவர்கள் செய்யும் வேலை, இது. என்னை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.

நான் நன்றாக இருக்கிறேன். நல்ல உடல்நலத்துடன் என் வேலைகளை செய்து வருகிறேன். என் மீது பாசம் கொண்ட ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

நான் இப்போது, ‘குபேரன்’ என்ற படத்தை வாங்கி, ‘ரிலீஸ்’ செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்த படத்தில் நானும், மம்முட்டியும் இணைந்து நடித்து இருக்கிறோம். அஜய் வாசுதேவ் டைரக்டு செய்து இருக்கிறார். தரமான கதையம்சம் கொண்ட படம். என் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.”

இவ்வாறு ராஜ்கிரண் கூறினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.