full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

காதலியை கரம்பிடித்தார் டூப் நித்யானந்தா

 
 பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ மூலம் டூப் நித்யானந்தாவாக‌  நடித்து பிரபலமானவர் யோகி. சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் யோகி தன் காதலி சவுந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் கடந்த ஜூன் 24-ந் தேதி எளிமையாக நடைபெற்றது. இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
யோகி – சவுந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருவரும் காதலிக்கவில்லை. சமீபத்தில் கல்லூரி ரீ-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்துள்ளார். அப்போது காதல் மலர்ந்தாலும், யோகி காதலை வெளிப்படுத்தவில்லையாம்.
இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில், எப்படியோ காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் பிடித்துப்போனதால், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றதால், யோகியின் நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.