இது சிறந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தேர்வுகளில் ஒன்றாகும்,மேலும் படத்தின் முன்னணி ஜோடியான கலையரசன் மற்றும் மிர்னா சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2021 நவம்பரில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் 2021 முதல் திரைப்பட விழா சுற்றுகளில் கலந்துகொண்டது.இந்த மாத இறுதியில் NYIFF இன் 2022 பதிப்பில் புர்கா அதன் உலக
அரங்கேற்றத்தைக் கொண்டிருக்கும்.
படக்குழுவிவரம்:
ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு, இசை ஆர் சிவாத்மிகா, எடிட்டிங் பி பிரவின் பாஸ்கர், ஆடை வடிவமைப்பு மீனாட்சி ஸ்ரீதரன் மற்றும் சிறப்புத்தோற்றம் ஈடிணையற்ற மூத்த ஜாம்பவான் ஜிஎம் குமார் நடித்துள்ளார்.வ்யூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸின் திலானி ஆர், திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.