BIOSCOPE USA மற்றும் AKIRA PRODUCTIONS தயாரித்த இத்திரைப்படத்தின் – கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – இராதாகிருஷ்னண் பார்த்திபன். மீண்டும் ஒரு அசாதாரணமான முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் பார்த்திபன். உலகின் முதல்’ NON-LINEAR SINGLE SHOT MOVIE’ என்ற பெருமையுடன், தமிழ் திரை உலகுக்கே உலக அரங்கில் பெருமை சேர்க்கப் போகும் திரைப்படம் இந்த “இரவின் நிழல்” – ஆம் !
திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த படைப்பாளிகள் பலரும் பரவசமாய், நெகிழ்ச்சியாய் பகிர்ந்தது இத்தகவலே!
ஒரு இசைவெளியீடு _ பாராட்டு விழா எப்படி இருக்குமோ அப்படி இந்த நிகழ்ச்சி நிச்சயம் இருக்காது! பார்த்திபன் எப்படியும் நம்மை ஆச்சர்யப்படுத்துவார் என்று நம்பிக்கையில்தான் சென்றோம் .ஆனால் நாம் நினைத்ததை விட 10 மடங்கு ஆச்சர்யத்தை உண்டாக்கிவிட்டார் மனிதர்! ஆம்…தனது படைப்பு மாத்திரமல்ல, ஒரு நிகழ்ச்சியைக்கூட வித்தியாசத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல நிச்சயமாய் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபனே! தனது போட்டியாளராய் தன்னையே நினைப்பதால், அடுத்தடுத்து சிகரம் தொடுகிறார் பார்த்திபன்.
‘Musical journey of A.R.Rahman’ என்ற கலைமிகு நுழைவாயில் நமை வரவேற்க… பியானோ வடிவிலான கருப்பு – வெள்ளைக் கட்டைகளின் வளைவுகளுக்கிடையே நாம் பயனிக்க, மரப்பலகைகளில் வரைந்த ஓவியம் மனதில் இசைக்க, எதிரே Press – க்கான பார்த்திபன் ஸ்டைல் மேசையில் press – Red Carpet Interview.


