வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். காதல் கதைகளை மயக்கும் விதத்தில் சித்தரிப்பதில் பெயர் பெற்ற ஹனு ராகவாபுடி இப்படத்தை இயக்குகிறார், ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை தயாரிக்கிறார்.
படத்தின் இசை பாடல் குறித்த முன்னோட்ட விளம்பரங்கள் சமீபத்தில் தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டன. முதல் சிங்கிள் ‘ஓ சீதா ஹே ராமா’, காதல் மெல்லிசை பாடல், இசை ஆர்வலர்களை மயக்கியது. இந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில், சார்ட்பஸ்டர் ஆனது, இப்போது ஆல்பத்தின் அடுத்த பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘சீதா ராமம்’ படத்திற்கு PS வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.