ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும்

cinema news General News

ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – “டங்கி” வார இறுதியில் 40% – 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது

 

விழாக்காலத்தில் குடும்பங்கள் கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் படமாக “டங்கி” அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

“டங்கி” திரைப்படம் இறுதியாக உலகம் முழுவதும் பெரிய திரைகளில் வெளியாகி, பார்வையாளர்களின் இதயங்களை ஆட்சி செய்யத் தொடங்கி விட்டது. இத்திரைப்படம் இதுவரை 30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40% – 50% அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. வெள்ளிக்கிழமையை விட சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது குடும்பங்கள் குதூகலமாக “டங்கி” திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, நல்ல உள்ளடக்கத்துடன், குடும்ப பார்வையாளர்களை கவரும் அனைத்து அம்சங்களுடன் வெளியாகியுள்ள “டங்கி” திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது உள்ளது.

சர்வதேச அரங்குகளிலும் டங்கி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது! இன்று (சனிக்கிழமை) வெள்ளிக்கிழமைக்குப் பிறகு முதல் நாளை விட 40 -50% அளவிலான டிக்கெட் புக்கிங்கை பெற்றுள்ளது. அழகான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான “டங்கி” பாக்ஸ் ஆபிஸிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

https://x.com/sumitkadei/status/1738438599412965412?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg

https://x.com/rohitjswl01/status/1738427042167959749?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg

அழகான கதாப்பாத்திரங்களில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி உலகம் முழுதும் திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறது.