லேகா தியேட்டர்ஸ் தயாரிப்பில், ஆதிராஜன் எழுத்து இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் 1417-வது படமாக உருவாகிவரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மனநல மருத்துவராக பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் ஆர்கே செல்வமணி தலைமையிலான அணியில் போட்டியிட்டு, இரண்டாவது முறையாக இயக்குனர் சங்கத்தின் பொதுச்செயலாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.
இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் ஆர் வி உதயகுமார் இன்று (28.03.2022) விஜிபி ரிஸார்ட்டில் நடைபெற்ற “நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பில் பங்கேற்றபோது, படத்தின் இயக்குனர் ஆதிராஜன் தயாரிப்பாளர் ராயல் பாபு ஆகியோர் அவருக்கு ஆளுயுற ரோஜா மாலை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
படத்தின் நாயகன் பிரஜன் நாயகி சினாமிகா நடிகர் முத்துராமன் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசர்ஜி கலை இயக்குனர் முனி கிருஷ்ணா இனண இயக்குனர் உமாபதி ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது படக்குழுவினர் அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார் இயக்குனர் ஆர் வி உதயகுமார்.