நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரெஜினா படத்தில் ‘சூறாவளி’ எனத் தொடங்கும் பாடலின் டியூனை நான் சுயாதீனப் பாடலுக்காக சேமித்து வைத்திருந்தேன். அப்பாடல் ஒரு அம்மாவும், மனநிலை குன்றிய பெண்ணிற்குமான பாடலாக வைத்திருந்தேன். இந்த இசையைக் கேட்டதும் இயக்குநர் இந்த படத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

இயக்குநர் முதலில் என்னிடம் கூறும்போது பாடல்கள் தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். கதையோடு பயணிக்கும் வகையில் தான் பாடல்கள் இருக்கும். 5 பாடல்களும் 5 விதங்களில் இருக்கும். ஆனால், கதைக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.
தமிழில் வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி போன்றோர் பாடியிருக்கிறார்கள். மலையாளத்தில் ரம்யா நம்பீசன், பாடல்கள் யுகபாரதி எழுதியிருக்கிறார்.
மலையாளத்தில் ஹரிநாகேஷ் எழுதியிருக்கிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து நிறைய படங்கள் தயாரிக்கும்.
கணவன், மனைவிக்குள் இருக்கும் ஆபாசமில்லாத அழகான காதலை பதிவு செய்யும் விதமாக இப்படம் இருக்கும். மேலும், இப்படம் யதார்த்தமான படம். ஒரு சராசரியான பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறோம்.