full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்?

முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி, அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த நிலத்தில் எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் அவை நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலம் என்றும் தெரிய வந்துள்ளதால் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த குறிப்பிட்ட நில வணிக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம்.

தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம், அந்த நில வணிக நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.