முழுக்க முழுக்க 3டி-யில் 2.0

News

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டை வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, சைனீஷ், ஸ்பானீஷ், ஜப்பானீஷ், கொரியன் மொழிகளில் வெளியாக உள்ளதாக லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தியா முழுக்க 10000 திரையரங்குகளில் 2.0 படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், முதல்முறையாக முழுக்க முழுக்க 3டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படம் குடியரசு தினத்தையொட்டி அடுத்த வருடம் ஜனவரி 25-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.