full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எந்திரன் இசை விழாவில் ஏ ஆரின் கச்சேரி

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவின் போது ஏ ஆர் ரஹ்மான் இசை கச்சேரியும் இடம்பெறுவதாக இயக்குநர் சங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து இந்த நிகழ்ச்சி நேரலையில் காண்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்களுக்கு அது ஒரு நேரடி இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

`2.0′ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.