full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

துபாய் அரசர் கலந்து கொள்ளும் 2.0 இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்:

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகஉருவாகியிருக்கும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி நடைபெறுகிறது.

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

** 2.0 படத்தின் இசை வெளியீடு burj parkல் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

** இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்.

** பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி – இயக்குநர் ஷங்கர் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.

** 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.

** துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.