full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
 
S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
இவருடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
மேலும் முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.
 
 
இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார்.
 
சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் :
 
தயாரிப்பு – K.கார்த்திக்கேயன்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – பாண்டி குமார்
இசை – அச்சு ராஜாமணி
படத்தொகுப்பு – தீபக்
சண்டைப்பயிற்சி – சுப்ரீம் சுந்தர்
புரோடக்ஷன் மேனேஜர் – சசி
எக்சிகியுடிவ் புரோடுயுசர் – S.இசக்கி கிஷோர்