full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

முழுக்க முழுக்க ‘தல’ ரசிகர்களுக்காக !

J.K.பிலிம் புரொடக்சன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.

மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.

“பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் R.K.சுரேஷ் சாதிய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து வருகிறார். சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், படத்தொகுப்பு – ராஜா முகம்மது, கலை – மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப்பயிற்சி – சக்தி சரவணன், பாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி, இணை இயக்கம் – k.முருகன், கிருஷ்ணமூர்த்தி, பாரதி, தயாரிப்பு – K.C.பிரபாத், இணை தயாரிப்பு – P.A.கோட்டீஸ்வரன், இயக்கம் – சரவண சக்தி, வசனம் – MMS மூர்த்தி

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீடு நடக்கவுள்ளது.