full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அசத்தல் முடிவு எடுத்த நடிகர்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

அதன் படி ‘தினகரன்’ நாளிதழ் சினிமா நிருபர் தேவராஜ் தனது உடலை தற்போது தானமாக வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தேவராஜ் இவர் கடந்த 27 வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடிய தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்வதற்கான பத்திரத்தில் உறுதி மொழி அளித்துள்ளார். அந்த சான்றிதழ்களை கயல் தேவராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.