full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்வை கிண்டல் செய்த பிரபல நடிகர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய சென்னை அணி 10 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது.

சென்னை அணி எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் 21 பந்துகளில் 39 ரன்கள் தான் தேவை என்ற நிலையில் கேதர் ஜாதவ் களமிறங்கினார். 20 ஓவர் போட்டியில் இந்த ரன்களை அடிப்பது மிக எளிது என்றே கருதப்பட்டது. ஆனால் கேதர் ஜாதவின் ஆமை வேக ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை தழுவியது. 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

கேதர் ஜாதவ்வின் ஆட்டத்தை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் போட்டு நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ், கேதார் ஜாதவ்வை கிண்டலடித்து பதிவிட்டுள்ளதாவது “ரொம்ப நன்றி ஜாதவ், நல்லா வருவீங்க. பிளீஸ் தோனி…. அணிக்கு 10 பேர் கூடபோதும்” என பதிவிட்டுள்ளார். நடிகர் சதீஷின் இந்த இரண்டு டுவிட்டுகளுக்கும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.