full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முன்னணி கதாநாயகிக்கு விரைவில் திருமணம்

தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கெளசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கெளசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். கெளசல்யா பெங்களூருவை சேர்ந்தவர். இவருடன் நடிக்க வந்த நடிகைகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கெளசல்யா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.

தற்போது அவர் திருமணத்துக்கு தயாராகிறார். மலையாள படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கெளசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “நிறைய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. இங்குள்ள புட்டும் கடலையும் எனக்கு பிடித்த உணவு.” என்றார்.