full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

உடல் நலக் குறைவால் பிரபல பட தயாரிப்பாளர் வி சாமிநாதன் மரணம்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவரான V. சாமிநாதன்(67) அவர்கள் இன்று (திங்ககிழமை) மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும்.

இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் K.முரளிதரன், G.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, , உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, , அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரமாண்டமன படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த பத்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி மற்றும் அசோக்,அஸ்வின்(கும்கி) ஆகிய மகன்களும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அன்னாரது மறைவுக்கு திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.