இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட்

News
0
(0)
 
உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட், “காதல் கவிதை” மற்றும் “தூரல்” என்ற இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை தயாரித்துள்ளார். Dr.ரகுநாத் மனெட் மற்றும் AIRTEL SUPER SINGER புகழ் FARIDHA இருவரும் சேர்ந்து இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பம் நமது கலாச்சாரயத்தை அழகாக உணர்த்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
 
Archie Shepp, Michel Portal, Didier Lockwood, Carolyn Carlson, Richard Galliano, Dr. Balamurali Krishna, Drums Sivamani உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் Dr.ரகுநாத் மனெட் பணிபுரிந்துள்ளார்.
 
Dr.ரகுநாத் மனெட் பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை (Chevilar award) கலைத் துறையில் தனது பங்களிப்பிற்காக வாங்கி உள்ளார். காதல் கவிதை மற்றும் தூரல் ஆல்பங்களை சென்னையில் பல முன்னணி சினிமா பிரபலங்களின் முன்னணியில் பிரமாண்ட முறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
 
இந்த இரண்டு ஆல்பங்களை இளம் இயக்குநர் என்.எஸ்.ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர் KARMA என்கின்ற குறும்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர், அந்தக் குறும்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
விக்ரம் வேதா திரைப்படத்தில் உதவி எடிட்டராக பணிபுரிந்த சூர்ய பிரகாஷ் M.K இந்த ஆல்பத்தை எடிட்டிங் செய்து உள்ளார்.
 
இப்பாடல் பிரான்ஸ், பாண்டிச்சேரி மற்றும் பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.