அரசியலில் இருந்து சினிமாவுக்கு வரும் இளைஞன் பயாஸ்

News
 
தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர்கள் பலர் உண்டு.  பலர் சினிமா பிரபலத்தை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியதும் உண்டு.  ஆனால் அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள் சிலபேர் மட்டுமே அதுவும் பெயர்சொல்லும் அளவுக்குக்கூட பிரபலமாகாமல் ஒதுங்கியிருப்பார்கள்.  
 
ஆனால் சென்னை துறைமுகம் பகுதியில் பிரபலமான கட்சியின் அமைப்பாளராக  இளம் வயதிலிருந்தே பணியாற்றி வருபவர் , கட்சிப்பொருப்புகளை செவ்வனே செய்துவரும்   இவர் சினிமாவில் நடிப்பதில்  பெரும் ஆர்வம்கொண்டு சினிமாவுக்கென்று நடிப்பு , சண்டை ,நடனம் போன்ற பயிற்சிகளை பெற்று முறையான நடிகனாக அறிமுகமாகிறார் . பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் நடிகர் பயாஸ்  அரசியலை விட சினிமா ரொம்ப சிரமம் என்கிறார்.
 
கட்சிப்பணிகளின் இடையில் நடிப்பது தனக்கு சிரமமல்ல என்றும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும் எனக்கு உகந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் என்கிறார்.  தான் நடிக்கும் முதல் படமே ஒரு அரசியல் படமாக இருப்பது இன்னும் மகிழ்ச்சி என்கிறார் பயாஸ்.