ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.

cinema news

தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுல் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, உலகளவில்  சாதனை படைத்துள்ளது.

 
ஜீ5 தளத்தில்,  “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது தற்போது மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
 
தமிழ்  ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள்  மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது.
 
நடிகர் அஜித் குமார் அவர்களை கௌதவபடுத்தும் வகையில், ‘வலிமை’  திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில்  ஜீ5 தளத்தில்  ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக அறிவிக்கும் நிகழ்வை, 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டு கொண்டாடியது குறிப்பிடதக்கது. ஜீ5 தளங்களில் வெளியான படங்களின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து பல புதிய சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது.

2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும்,  ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது. இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம் ஆகியவை ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைத்தது.

 

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 
12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமானது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட்டுமே!