வணக்கம் நான் மிளிர் பட தயாரிப்பாளர் சூர்யா தேவி நானும் எனது பியான்சியும் கடந்த ஒரு வருடமாக d.no.986 , 67th தெரு, 11th செக்டர் கே கே நகர், சென்னை- 78 .என்ற முகவரியில் வசித்து வருகிறோம் வீட்டின் உரிமையாளர் திருமதி அலி பாத்திமா மற்றும் முகமது ஓலி இருவரும் தங்களுக்கு வீடு வேண்டும் என்று உடனடியாக வீடு காலி பண்ணி தர சொல்லி கடந்த 2 மாதமாக என்னை ஹரஸ்மெண்ட் செய்கிறார். ஹவுஸ் ஓனர் அனுப்பினார் என்று சொல்லி வீட்டிற்கு இரவு 11 மணி இரவு 2 மணி என்று நேரம் காலம் இல்லாமல் ஒவ்வொருவராக வந்து கதவை தட்டுகிறார்கள வீடு காலி செய்யவில்லை என்றால் அடியாட்களை வைத்து மிரட்டுவதும் இதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் அவர்களை சட்டரீதியாக சந்திப்பதற்காக நான் R7 காவல் நிலையம் கேகே நகர் க்கு புகார் அளித்தேன் மேலும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் இது தொடர்பாக கோர்ட்டில் கேஸ் பைல் செய்துள்ளேன் இந்தநிலையில் இன்று காலை 11 :45 மணி அளவில் என் வீட்டிற்கு வந்து அடாவடியாக ஐந்து நபர்கள் ஹவுஸ் ஓனர் பெயரை சொல்லி வீட்டின் கதவை உடைத்து நான் துணி மாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து கொண்டு என்னையும் மானபங்கம் செய்து என் பியான்சி யும் சட்டை பனியனை கிழித்து தரதரவென்று வெளியே இழுத்து வந்து ஐந்து நபர்கள் சேர்ந்து அடித்தார்கள் விளக்கச் என்ற எண்ணையும் கீழே தள்ளி விட்டார்கள் நான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் இது சம்பந்தமாக எனக்கு நியாம் வேண்டும் இந்த விஷயம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக்கு நடந்த அநீதி போன்று இனி எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது எந்த ஹவுஸ் ஓனர் ரூம் இதுபோல் செய்யக் கூடாது என்பதற்காக நான் அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். மீடியா மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்கள் எனக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையோடு இதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன்
இப்படிக்கு
சூர்யா தேவி.
இவ்வாறு மிளிர் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தேவி கூறியுள்ளார்…