எல்லாம் அவன் செயல் படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான பிசினஸ்மேனாக வலம்வரும் ஆர்கே தனது புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை கடந்த சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் கொண்டுவந்தார்..
தலைமுடிக்கு ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ உருவாகியுள்ளது. வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. குறிப்பாக இது கைகளில் ஒட்டாது என்பது தான் இதன் தனித்தன்மையே.. இதற்காக இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார் ஆர்கே.
