தமிழ் “ஓடிடி” தமிழக முதல்வர் வாழ்த்து..!

cinema news
 
தென்னிந்தியாவில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஆஹா ஓடிடி தளம் தற்போது 100 % பொழுதுபோக்கை வழங்க தயாராகியுள்ளது.
இன்று, ஆஹா நிறுவனர்கள் திரு அல்லு அரவிந்த் மற்றும் ஜூபல்லி ராமு ராவ், தமிழக முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில்  விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தனர். நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்  கொண்டாட்டத்திற்கான இந்த புதிய துவக்கத்தை கேட்டு மகிழ்ந்து,  உற்சாகம் அடைந்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி  வருகையால் தமிழ் பொழுதுபோக்கு உலகம் இப்போது இன்னும் பெரிதாகிவிட்டது.