நடிகர் நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்” படத்தின் டீசர் வெளியானது.

cinema news
0
(0)

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும்  Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Mahaveeryar Movie (2022): Cast | Trailer | Songs| First Look | Release Date - News Bugzஇயக்குனர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து  இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, உணர்வுப்பூர்வமான  தருணங்களுடன், பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும், முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

இஷான் சாப்ரா இப்படத்திற்கு இசையமைக்க, விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படக்குழுவில் மனோஜ் (எடிட்டர்), விஷ்ணு கோவிந்த் (ஒலிக்கலவை), அனீஸ் நாடோடி (கலை இயக்கம்), சந்திரகாந்த் & மெல்வி J (ஆடைகள்), லிபின் மோகனன் (ஒப்பனை), பேபி பணிகர் (இணை இயக்குனர்) பணிகளை செய்துள்ளனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.