ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள ” பாம்பாட்டம் ” படத்தை இயக்கிய கையோடு இயக்குனர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.பாம்பாட்டம் படத்தின் இணை தயாரிப்பாளரான பண்ணை A.இளங்கோவன் தனது பண்ணை பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் ” நாக பைரவா ” படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்க உள்ளதோடு நாயகனாகவும் அறிமுகமாகிறார்.
பிரபல இந்தி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.ஜுலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.முழுக்க முழுக்க மும்பையில் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் நம்மிடையே பகிர்ந்தவை…

1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி உள்ளேன்.
2000 ராஜபாளைய நாய்களும் ஆயிரக்கணக்கான மாம்பா பாம்புகளும் படத்தில் இடம்பெற இருக்கின்றன. தமிழ் தெலுங்கு ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த நாக பைரவ உருவாக இருக்கிறது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் பிரம்மாண்டமாக வர வேண்டும் என்பதற்காக பிரபல ஹாலிவுட் நிறுவனம் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்றார் இயக்குனர் V.C.வடிவுடையான்.